ஜெர்மனி – மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி..!!!

ஜெர்மனி நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஹாலே நகரம். இங்குள்ள சர்ச் அருகே மர்ம நபர்கள் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தப்பி ஓடிய மற்றவர்கள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்பதால் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment