வவுனியா நகர்ப்பகுதியில் 24 டெங்கு நோயாளர்கள்!!

வவுனியா நகர்ப்பகுதியில் 24 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியா நகர்ப்பகுதியில் 24 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிமனையின் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயின் தாக்கம் குறித்து கேட்ட போதே அவர் இன்று இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா நகரப்பகுதியில் டெங்கு தொற்று அதிகரித்துள்ளது. இங்கு 24 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 103 இடங்களில் நுளம்பு பெருக்கக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களும் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment