வவுனியா வைத்தியசாலையில் 7 வயது சிறுவன் மரணம்!! (படங்கள்)

வவுனியா வைத்தியசாலையில் 7 வயது சிறுவன் மரணம்; உறவினர்கள் குழப்பம்

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 வயது சிறுவன் ஓருவர் மரணமடைந்துள்ளார். வைத்தியசாலையின் அசமந்த போக்கே மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் வைத்தியசாலையில் கூடியமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஓருவன் நேற்று மாலை உடல்நிலை இயலாமல் இருப்பதாக வீட்டில் தெரிவித்துள்ளார்.

எனினும், மகன் சும்மா சொல்வதாக கருதி தந்தை அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. தொடர்ந்தும் சிறுவன் ஏலாமல் இருப்பதாக கத்தியதையடுத்து தாயார் அதிகாலை 3 மணியளவில் சிறுவனை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் காலை 8.30 மணியளவில் வைத்தியசாலையில் சிறுவன் மரணமடைந்துள்ளான்.

இந்நிலையில் வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாடே சிறுவனின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் வைத்தியசாலை வைத்தியர்களுடன் முரண்பட்டனர். பொலிசார் தலையிட்டு நிலமையை கட்டுப்படுத்தினர்.

வவுனியா, கற்குழியைச் சேர்ந்த எஸ்.டிலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

இதேவேளை, மரண விசாரணைஅறிக்கையின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment