தேசிய போட்டிகளுக்கு செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு நிதி!! (படங்கள்)

தேசிய போட்டிகளுக்கு செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு -கரைச்சி பிரதேச உறுப்பினர் ஜிவராசா நிதி உதவிகள் வழங்கினார்….

தேசிய ரீதியில் நடை பெறவிருக்கும் கபடி போட்டி களில் கலந்து கொள்ள இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலை

மாணவர்களுக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜிவராசா அவர்கள் சிறிய உதவு தொகையை வழங்கி வைத்தார்

இன்று (10/10/2019) காலை குறித்த கிளிநொச்சி இந்துக் கல்லூரி மற்றும் கோணாவில் பாடசாலைகளுக்கு சென்ற கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜிவராசா அவர்கள் பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு ஆசி வழங்கியதுடன் அவர்கள் குறித்த இந்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்க்கும் அப்பால் இந்த மண்ணுக்கும் இந்த மாவட்டத்திற்க்கு பெருமை சேர்த்து தரவேண்டும் வேண்டும் என்று கூறி தன்னால் முடிந்த குறித்த உதவி தொகையை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

Comments (0)
Add Comment