சிரியா மீது தாக்குதல்- துருக்கி அரசுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!!!

வடக்கு சிரியாவில் குர்திஷ் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் துருக்கி ராணுவம் பயங்கர தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ வீரரகளை திரும்ப பெறப் போவதாக கடந்த ஞாயிறன்று டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து இந்த தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முடிந்தவரை மனிதாபிமானத்துடன் செய்யாவிட்டால், பொருளாதாரத் தடைகளை விட கடுமையான நகர்வுகள் குறித்து பரிசீலிப்பேன். துருக்கி அரசு போர் நடவடிக்கைகளை சுமூகமான முறையில் செயல்படுத்தலாம் அல்லது கடுமையாகவும் செயல்படுத்தலாம். ஒருவேளை துருக்கி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால், மிகப்பெரிய பொருளாதார தடையை சந்திக்க நேரிடும்’ என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment