அமெரிக்காவில் ராணுவ ரகசியங்களை கசியவிட்ட புலனாய்வுத்துறை அதிகாரி கைது..!!!

அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு புலனாய்வுத் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஹென்றி கைல். இவர் நாட்டின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய தகவல்களை பத்திரிக்கையாளர்கள் இருவருக்கு தந்ததால் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்கள் மூலமாக இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

‘கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் ஹென்றி கைல் ரகசிய தகவல்களை பத்திரிக்கையாளர்களுக்கு கசிய விட்டுள்ளார். ராணுவ ரகசியங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்க அவருக்கு எந்த அங்கீகாரமும் அளிக்கப்படவில்லை. வேண்டுமென்றே ராணுவ ரகசியங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட தகவல்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும்’ எனவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

Comments (0)
Add Comment