ஒருதலை காதலால் விபரீதம் – மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை..!!

கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாலன். இவரது மகள் தேவிகா(வயது17). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தேவிகா பிளஸ்-2 படித்து வந்தார். எர்ணாகுளம் வடக்கு பரவூரைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி மிதுன் என்பவர் மாணவி தேவிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

பலமுறை அவர் தனது காதலை மாணவியிடம் கூறிய போதும், அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். இதனால் மாணவி மீது மிதுன் ஆத்திரத்தில் இருந்தார்.

இன்று அதிகாலை ஒரு மணி அளவில் மிதுன் கையில் பெட்ரோல் கேனுடன் தேவி வீட்டிற்குள் சென்றார். அவர் கதவை பலமாக தட்டியதால் ஷாலன் கதவை திறந்துள்ளார். அவரை தள்ளி விட்டு வீட்டுக்குள் மிதுன் புகுந்தார். இந்த சத்தம் கேட்டு எழுந்து வந்த தேவிகா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதனால் அலறி துடித்த தேவிகா கீழே சரிந்தார்.

உடனே மிதுன் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மிதுனையும், தேவிகாவையும் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் சம்பவ இடத்திலேயே தேவிகா உடல் கருகி பலியானார். ஆஸ்பத்திரியில் மிதுன் உயிர் இழந்தார்.

Comments (0)
Add Comment