ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய விதித்த தடையை நீக்க கோரி மனு..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட் கடந்த மாதம் 5-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை இன்று மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments (0)
Add Comment