கடத்தி செல்லப்பட்டு அடித்துக் கொன்ற பின் பெற் றோல் ஊற்றி கொலை!!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இவர் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவரின் சடலம் வவுனியா கள்ளிக்குளம் பகுதியிலுள்ள பற்றைக்காட்டுக்குள்ளிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதிக்காத பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில்குளம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் நின்ற அவர் வவுனியா நகருக்கு ஒருவரை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை 6.30 சென்றுள்ளார். பின்னர் அவர் காணாமல் போனார்.

அவரது தொலைபேசி தரவின் அடிப்படையில் இறுதியாக கள்ளிக்குளத்தில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு நடத்திய தேடுதலில் சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது

அவர் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியிலிருந்த பெற்றோலை ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் பிரகாரம் தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சுகந்தன் எனத் தெரியவருகின்றது.

நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா நகருக்கு சென்ற வேளை காணாமற்போயுள்ளதாக உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment