வவுனியா கொந்தகாரன்குளத்தில் முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்! (படங்கள்)

வவுனியா ஓமந்தை மருதமடு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட கொந்தகாரன்குளத்தில் PSDG-2019 திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 07.10.2019 திங்கட்கிழமையன்று இடம்பெற்றது.

கொந்தகாரன்குளம் அ.த.க.பாடசாலையின் அதிபர் திரு.ந.நவரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு.ஞானமுத்து அகிலன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதி பிரதம செயலாளர் அலுவலகம்-திட்டமிடல் வடமாகாணம்) கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார். மேற்படி நிகழ்வில் மருதமடு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், முன்பள்ளியின் ஆசிரியை,தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், மற்றும் கிராம மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment