திருவாரூர் திருடன் சுரேஷ்.. செங்கம் கோர்ட்டில் சரண்.. 14ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு!! (வீடியோ, படங்கள்)

லலிதா ஜுவல்லரி தேடுதல் வேட்டையின்போது, பைக்கில் இருந்து தப்பி ஓடினானே முக்கிய குற்றவாளி கொள்ளையன் சுரேஷ்.. அவன் இன்று காலை செங்கம் கோர்ட்டில் சரணடைந்தான். இதையடுத்து, கொள்ளையன் சுரேஷுக்கு அக்டோபர் 14ம் தேதி வரை சிறைக் காவல் விதித்து செங்கம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் நடந்து ஒரு வாரம் மேல் ஆன நிலையில், இதன் ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரமாக உள்ளனர். கடந்த வாரம், தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் சிட்டி-க்கு உள்ளே நுழையும் பகுதியான வெட்டாறு அருகில் சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு டீம் இறங்கி.. பொறி வைத்து கொள்ளையர்களுக்கு காத்திருந்தது.

மணிகண்டன் அப்போதுதான், ஸ்பிளண்டர் வண்டியில் 2 கொள்ளையர்கள் உட்கார்ந்து இருந்திருந்தார்கள். வண்டியை ஓட்டி வந்தது மணிகண்டன், பின்னாடி இருந்தது சுரேஷ். மணிகண்டனை துரத்தி பிடித்த நிலையில், சுரேஷ் போலீசாரிடம் இருந்து தப்பிவிட்டான்.

அதாவது முருகனின் தம்பி. மும்முரம் மும்முரம் அதனால் சுரேஷை பிடித்து விசாரித்தால், கேங் லீடர் முருகனும் எப்படியும் சிக்குவான் என்பதால், போலீசார் படு மும்முரமாக தேடி வந்தனர். இன்னொரு பக்கம், சுரேஷின் அம்மா கனகவள்ளியிடமும் விசாரணை நடத்தினர். ஆனால், மணிகண்டன், கனகவள்ளி.. இவர்கள் இருவருமே எந்த பெரிய தகவலையும் போலீசாரிடம் சொல்லவில்லை.

சரண் எனவே முருகன் அண்ணன் மகன் முரளி, மணிகண்டன், சுரேஷின் தாயார் கனகவள்ளியை போலீசார் கைது செய்து 4 நாளைக்கு முன்பு ஜெயிலில் அடைத்தனர். இந்நிலையில், திருவாரூரில் தப்பி ஓடிய சுரேஷ் செங்கம் கோர்ட்டில் இன்று காலை சரணடைந்தார். இதையடுத்து, கொள்ளையன் சுரேஷுக்கு அக்டோபர் 14ம் தேதி சிறைக் காவல் விதித்து செங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து சுரேஷை திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றது போலீஸ்! இனி சுரேஷிடம் போலீசார் நடத்தும் விசாரணையில் எப்படியும் முருகன் சிக்குவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் சரண் அடைந்து விட்டதால், லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பான விசாரணை திரும்பவும் சூடு பிடித்துள்ளது.


Comments (0)
Add Comment