நோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு! (வீடியோ, படங்கள்)

வெட்கம், மானம், கூச்சம், பயம் எதுவுமே இல்லாமல் ஆட்டோவுக்குள் சரக்கு அடித்து கொண்டிருக்கிறார் இளம்பெண்! பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஒரு பிரியாணி கடை உள்ளது. போன ஞாயிற்றுக்கிழமை இந்த கடைக்கு பக்கத்தில், ஒரு ஆட்டோ ஒன்று நின்றிருந்தது. அந்த ஆட்டோ பின்சீட்டில் ஒரு இளம் உட்கார்ந்திருந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார். மஞ்சள் சுடிதார் அணிந்திருக்கிறார்.

சிகரெட் அந்த பெண்ணுக்கு எப்படியும் 30 வயது இருக்கும். ஆட்டோ டிரைவர் சிகரெட் பிடித்து கொண்டு அந்த பெண்ணிடம் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார். யாரும் அவரை அடிக்கவில்லை, திட்டவில்லை, கட்டாயப்படுத்தவில்லை.. இவராகவே சரக்கு எடுத்து ஜாலியாக குடித்து கொண்டிருந்தார். அசால்ட் அசால்ட் மொத்தத்தையும் குடித்துவிட்டு பாட்டிலை அசால்ட்டாக ரோட்டோரம் வீசினார். இதனை அந்த வழியாக சென்ற பலர் பார்த்து ஆடிப்போய்விட்டார்கள். ஒருசிலர் அங்கேயே நின்று அப்பட்டமாக இதை செல்போன்களில் படம் பிடித்தும் கொண்டனர். ஆனால் அந்த பெண் எதையும், யாரையும் பற்றியும் கவலைப்படவே இல்லை.

வைரல் வீடியோ இந்த பெண் யார் என்றும் தெரியவில்லை. இந்த வீடியோ கடந்த 2 நாட்களாகவே வைரலாகி வயிற்றெரிச்சலையும், ஆத்திரத்தையும் பொதுமக்களுக்கு கிளப்பி வருகிறது. இதனால் போலீசாரும் அந்த பெண் யார் என்ற விசாரணையில் இறங்கினர். அந்த அந்த ஆட்டோ ஓனர் உரிமையாளர் பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பது மட்டும் என்பது தெரியவந்தது.

இவருக்கு வயது 48 ஆகிறது. ஐதராபாத் ஐதராபாத் தண்ணி அடித்த பெண் ஐதராபாத்தை சேர்ந்தவராம். பெயர் கவுதமியாம். கல்யாணம் ஆகிவிட்டது. இவர் கணவர் பொள்ளாச்சியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஐதராபாத்தில் புருஷனை பார்த்துவிட்டு ஊருக்கு கிளம்புவதற்காக இந்த ஆட்டோவில் ஏறியுள்ளார்.

டாஸ்மாக் அந்த ஆட்டோ அங்கிருந்த மார்க்கெட் வழியாக சென்றிருக்கிறது. அப்போது வழியில் ஒரு டாஸ்மாக் கடை பெண்ணின் கண்ணில் பட்டுவிட்டது. டாஸ்மாக்கை பார்த்ததும் இந்த பெண் ஆஃப் ஆகிவிட்டார்.. ஆட்டோவை நிறுத்தி இவரே இறங்கி போய் ஆஃப் வாங்கி வந்து, ஆட்டோவில் உட்கார்ந்து குடித்துள்ளார் என்பது தெரியவந்தது. டிரைவர் கைது டிரைவர் கைது இப்படி நடுரோட்டில் உட்கார்ந்து தண்ணி அடித்தால் விடுமா நம் போலீஸ்? பொது இடத்தில் மது அருந்த அனுமதித்தது, பெண் மதுகுடித்தபோது ஆட்டோ டிரைவர் வெளியில் நின்று கொண்டு பொது இடத்தில் சிகரெட் குடித்தது உள்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட மஞ்சள் சுடிதார் கவுதமியை காணோம்.. தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

Comments (0)
Add Comment