நாளை எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ; பாதுகாப்பிற்காக 537 பொலிஸார்!!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நடவடிக்கைகளின் பாதுகாப்பிற்காக பொலிஸ் தலைமைகத்தினால் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நாளை நடைபெறும் எல்பிட்டி பிரதேச சபை தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தெளிவுப் படுத்துவதற்காக எல்பிட்டி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸ் சோதனை சாவடிகள் மற்றும் பொலிஸ் நடமாடும் சேவையின் ஊடாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபை தேர்தல் 47 தேர்தல் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. தன்போது ஒரு தேர்தல் நிலையத்திற்கு 4 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என்னும் வீதத்தில் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய 188 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக 8 வீதி ஒழுங்குகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை எல்பிட்டி தொழிற்பயிற்சி மத்திய நிலையத்திலேயே தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் வழங்கப்படுவதுடன், தேர்தலின் இறுதி முடிவுகளும் வெளியிடப்படும். இதன் பாதுகாப்பு கருதி உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையின் கீழ் 52 பொலிஸார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை தொழிற்பயிற்சி மத்தியநிலையத்தை அண்மித்த பகுதிகளின் பாதுகாப்பு கருதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் வன்முறைகளை கட்டுபடுத்துவதற்காக கழகம் அடக்கும் பொலிஸ் பிரிவில் 4 குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த தேல்தல் நடவடிக்கைகளின் பாதுகாப்பு கருதி 537 பொலிஸார் சேவையில் ஈடுப்பட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment