மகிஷாசுரனை சங்கரித்த யாழ். ஏழாலை புவனேஸ்வரி அம்பாள்!! (படங்கள், வீடியோ)

யாழ். ஏழாலை எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் மகிஷாசுர சங்காரத்தைக் குறிக்கும் வகையிலான வன்னி வாழைவெட்டல் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை(08) நடைபெற்றது.

உலக சைவப் பெருமக்களால் நேற்று முன்தினம் நவராத்திரியின் பத்தாம் திருநாளான விஜயதசமிப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விஜயதசமிப் பெருவிழாவை முன்னிட்டு யாழ். குடாநாட்டிலுள்ள இந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகளும் அம்பாள் உள்ளிட்ட ஆலயங்களில் மஹிஷாசுர சங்காரத்தைக் குறிக்கும் வகையிலான வன்னி வாழை வெட்டல் நிகழ்வும் இடம்பெற்றன.

அந்தவகையில் பிற்பகல்-05 மணியளவில் வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து புவனேஸ்வரி அம்பாள் அடியவர்களின் தோள்களில் உள்வீதியிலும் பின்னர் வெளிவீதியிலும் எழுந்தருளி வலம் வந்தாள். அதனைத் தொடர்ந்து வன்னி வாழைவெட்டல் நிகழ்வு நடந்தேறியது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment