யாழில் வீட்டு வாசலில் நகைகள் அணிந்து நின்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

தனது வீட்டு வாசலில் வீதியோரத்தில் நின்ற இளம் பெண் கழுத்தில் அணிந்திருந்த 18 1/2 பவுண் தங்கநகைகளை மோட்டார்ச் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் சடுதியாக அபகரித்துக் கொண்டு தப்பித்துச் சென்றுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் யாழ். அச்சுவேலியில் நேற்று(09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணின் 16 பவுண் தாலிக் கொடியும், இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியுமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment