யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(11) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். கே.கே. எஸ் வீதியில் நாச்சிமார் கோவிலிலிருந்து சிவன் கோவில் வரை, நாவலர் வீதியில் ஐந்து சந்தியிலிருந்து இலுப்பையடிச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் அரசடி வீதிச் சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதிச் சந்தி வரை, மானிப்பாய் வீதியில் ஓட்டுமடம் சந்தியிலிருந்து கே.கே. எஸ் வீதி வரை,பிறவுண் வீதி, அரசடி வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து தட்டாதெருச் சந்தி வரை,

அசாத் வீதி, வி.ஏ தம்பி லேன், பிரப்பங்குளம் வீதி, பொன்னப்பா வீதி, சிவலிங்கப் புளியடி, கன்னாதிட்டி, கன்னாதிட்டி கார்கில்ஸ் பூட் சிற்றி, மணிக்கூட்டு வீதி, சிவன்- பண்ணை வீதி, காதி அபூபக்கர் வீதி, ஹரிகரன் அச்சகம் பிறைவேற் லிமிற்ரெட், அண்ணாமலையான் சிறி இராகவேந்திரா என்ரபிறைசஸ் பிறைவேற் லிமிற்ரெட், எவர்கிறீன் அச்சகம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment