பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட சஜித் பிரேமதாச !!

தனது உரைகளில் எந்த விதத்திலாவது ´ஸ்ரீ முகம்´ என தெரிவித்திருந்தால் அதற்காக தேர்களிடமும், பொது மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (10) பிற்பகல் காலி முகத்திடலில் நடைபெற்றது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தன்னால் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக பொது மக்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என கூறினார்.

அதேபோல் தன்னால் உருவாக்கப்படும் புதிய இலங்கையில் எந்தவகையிலும் களவு, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு இடம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தனது அந்த நோக்கத்திற்கு விரோதமாக எவரேனும் செயற்படுவார்களானால் அவர்களை பதிவியில் இருந்து விலக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தை வென்றவர்களுக்கே தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கமைய பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுக்கு பாதுகாப்பு தொடர்பான முக்கிய பதவியை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தனது ஆட்சியில் எந்தவொரு அரசியல்வாதிக்கும் ஜம்பர் காற்சட்டையை அணிவிக்க போவது இல்லை எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.

Comments (0)
Add Comment