சுவிஸ் “புளொட்” தோழர் பாபு & அவரது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்… (படங்கள் & வீடியோ)

சுவிஸ் “புளொட்” தோழர் பாபு & அவரது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்… (படங்கள் & வீடியோ)

சுவிஸ் “புளொட்” தோழரான சண்முகநாதன் சித்திரவேல் (பாபு) அவர்கள், தனது ஐம்பதாவது பிறந்தநாளையும், அவரது மகள் செல்வி.சித்திரவேல் சிந்துஜா (சிந்து) அவர்கள் தனது பதினெட்டாவது பிறந்ததினத்தை முன்னிட்டும், “அதிரடி” இணையத்தின் ஊடாக, “கல்விக்கு கை கொடுப்போம்”, மற்றும் “வாழ்வாதார உதவிகள்” எனும் திட்டத்தின் கீழ், வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய “கண்ணாட்டி” கிராமத்தில் உள்ள சுமார் அறுபத்தைந்து மாணவர்களுக்கான “கற்றல் உபகரணங்கள்” திரு.பாபுவின் குடும்பத்தால் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி மாணவ மாணவிகள் பாலர் வகுப்பு முதல், கல்வி உயர்தரம் வரையும் கல்வி கற்கும் அக்கிராமத்து மாணவ மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, சுவிஸ் “புளொட்” தோழர் பாபு அவர்களின் குடும்பம் மனமுவந்து இவ்வுதவியை செய்துள்ளனர்.

அத்துடன் இதே நிகழ்வில், அக்கிராமத்தை சேர்ந்த சுமார் இருபத்தைந்து குடும்பங்களுக்கு “வாழ்வாதார உதவிகளாக” உடுபுடவைகள் வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி உடுபுடவைகளானது “புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் பிரதம பொறுப்பாளரான லண்டனில் உள்ள திரு.திருமதி.கருணைலிங்கம் ஆனந்தி குடும்பத்தால், “அதிரடி” இணையம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வை புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர்களில் ஒருவரும், புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட செயற்குழுவின் செயலாளரும், வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினருமான கௌரவ தோழர்.ஜெகதீஸ்வரன் (சிவமண்ணர்) அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

அத்துடன் மேற்படி நிகழ்வில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் சசிதரன், சமூக சேவகர் திரு.மாணிக்கம் ஜெகன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆலய அறங்காவல் சபை உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், மாணவர்கள் என பெருமளவில் மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை இன்றுமாலை கிளிநொச்சி “சக்தி சிறுவர் இல்லத்தின்” வேண்டுகோளுக்கு அமைய, “உடுப்பு மினுக்கி மேசை” அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது. இவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, சுவிஸ் “புளொட்” தோழர் பாபு அவர்களின் குடும்பம் மனமுவந்து இவ்வுதவியை செய்துள்ளனர்.

மேற்படி நிகழ்வில், புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர்களில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்ட புளொட் அமைப்பாளருமான தோழர் ராஜா, புளொட் முக்கியஸ்தர்களில் ஒருவரான தோழர் சூரி, சமூக சேவகர் திரு.மாணிக்கம் ஜெகன் ஆகியோரும் கலந்து சிறப்பித்து உள்ளனர்.

மேற்படி நிகழ்வுகளில் நன்றியுரையாற்றிய திரு.மாணிக்கம் ஜெகன் அவர்கள், “மேற்படி நிகழ்வுகளை நடாத்தி கற்றல் உபகரணங்களுடன், வாழ்வாதார உதவிகளையும் புரிந்து “எல்லோர் மனங்களையும் குளிர வைத்த” சுவிஸ் புளொட் தோழர் பாபுவின் குடும்பத்துக்கு எமது முதற்கண் நன்றிகளைத் தெரிவிப்பதுடன், மேற்படி நிகழ்வை நடாத்துவதுக்கு பலவழிகளிலும் துணைநின்ற சுவிஸ் ரஞ்சன் அண்ணர் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதுடன், இன்றைய பிறந்தநாளில் சுவிஸ் “புளொட்” தோழர் பாபுவுக்கும் அவரது மகள் சிந்துவுக்கும் எமது பிறந்த தின நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

தகவல்.. “அதிரடி” இணையத்துக்காக “புங்கையூரான்”
படங்கள் & வீடியோ… திரு.மாணிக்கம் ஜெகன் & திரு.சூரி.

Comments (0)
Add Comment