உங்களுக்காகவும் நான் இருக்கின்றேன்: டக்ளஸ்எம்.பி! (படங்கள்)

உங்களுக்காகவும் நான் இருக்கின்றேன்: செஞ்சோலை உறவுகளுக்கு டக்ளஸ்எம்.பி.நம்பிக்கை!

உங்களுக்கு உறவுகள் இல்லை என்றோ உதவிக்கரம் நீட்ட யாரும் இல்லை என்றோ கவலைகொள்ள வேண்டாம். உங்களுக்காகவும் கரம் கொடுக்க நான் இருக்கின்றேன். நம்பிக்கையுடன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லுங்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா செஞ்சோலை கிராம் உறவுகளுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மலையாள்புரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலைக் கிரா மத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் அங்கு வாழும் உறவுகளது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் பார்வையிட்டு ஆரய்ந்தறிந்தகொண்டார்.

அதன்பின்னர் அக்கிராமத்தில் நடைபெற்ற செஞ்சோலையின் வலிகள் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இறுவெட்டை வெளியிட்டு வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த கால யுத்தத்தின் வலிகள் உங்கள் ஒவ்வொருவரதும் வாழ்க்கையில் கண்ணூடாக தெரிகின்றது.

உங்களது வாழ்கையில் என்றோ நிரந்தர ஒளிமயத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் நம்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அக்கறை கொள்ளவில்லை. அவர்கள் உங்களது அழுகைகளைத்தான் தமது சுயநல அரசியலுக்கு முதலீடாக கொள்கின்றனர்

இதனால்தான் யுத்தம் முடிந்து இதுவரை காலத்திலும் அவர்கள் உங்களை கண்டுகொள்ளாதிருக்கின்றனர்

ஆனால் இன்று நான் உங்களிடம் வந்துள்ளேன். உங்கள் வலிகளை அறிந்தவன் நான். உங்களது வாழ்க்கையில் நிரந்தர வசந்தம் வீச நிச்சயம் அனைத்து முயற்சிகளையும் செய்வேன்.

நீங்கள் என்மீது நம்பிக்கை வையுங்கள் நான் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான குடிநீர் பிரச்சினை மலசலகூட பிரச்சினை போன்ற அத்தியாவசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவில் நிறைவுசெய்து தருகின்றேன்.

அதுபோல உங்கள் ஒவ்வொருவரது வாழ்விலும் நிரந்தரமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அனைத்துவிதமான் முயற்சிகளையும் நான் முன்னெடுப்பேன்.

வரவுள்ள ஆட்சி மாற்றத்தில் இவ்வாறாக எமது மக்கள் படும் துன்ப துயரங்களை துடத்தெறிந்து அனைத்து தமிழ் மக்களையும் சிறப்பான் ஒரு வாழ்வியல் சூழ்நிலைக்கு அழைத்து செல்லவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.என்றார்
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment