சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கி தருகிறேன் – டக்ளஸ்!! (படங்கள்)

எம்மை நம்பி அணிதிரளுங்கள்: சுபீட்சமான எதிர்காலத்தை மிகவிரைவில் உருவாக்கி தருகிறேன் – கிளிநொச்சி யில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

சர்வதேசத்தினூடாக எமது மக்களுக்கு எத்தகைய தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை.நாம் முன்னெடுத்துவரும் தேசிய நல்லிணக்கத்தினூடாகவே பழிவாங்கல்கள் பாரபட்சங்கள் அற்ற வகையில் எமது மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்ள முடியும். அந்தவகையில் எந்தவொரு பழிவாங்கல்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் எமது மக்களின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக அமைக்கும் வழிமுறையை உருவாக்கித்தர எம்மால் முடியும். ஆனால் அதற்கு அரசியல் பலமே எமக்கு வேண்டும். தற்போது எமது மக்கள் முன் சிறந்ததொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை எமது மக்கள் நான் காட்டும் வழிமுறைக்கு அணிதிரண்டு அரசியல் பலத்தை தருவார்களேயானால் நிச்சயம் எமது மக்களின் அனைத்து அபிலாசைகளுக்கும் விரைவில் தீர்வு பொற்றுத்தருவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்டத்தின் நிர்வாக செயலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டு சமகால அரசியல் மற்றும் கட்சியின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாம் தென்னிலங்கையில் மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையான தலைமையாகவே இருந்து வழிநடத்தி வந்திருந்திருக்கின்றோம். ஆனாலும் துரதிஷ்டவசமாக மக்கள் எமக்கு அரசியல் ரீதியான பலத்தை முழுமையாக தந்திருக்கவில்லை.

கடந்தகால தமிழ் அரசியல் தலைமைகள் முன்னெடுத்துவந்த சுயனலப்போக்கு அரசியலயலையே இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். இவர்களது இத்தகைய போக்குகள்தான் இன்றுவரை எதுவித தீர்வுகளை காணமுடியாமைக்கு காரணம்.

ஆனால் நாம் முன்வைக்கும் வாக்குறுதிகளுக்கு நாங்களே பொறுப்பாளர்கள். நாம் எதனையும் தற்துணிவுடன் செய்து காட்டியவர்கள். மக்கள் எனக்கு நம்பிக்கையுடன் தமது அரசியல் பலத்தை தருவார்களானால் அதைவிட அதிகம் செய்விப்போம்.

செய்வோம் செய்விப்போம் என்பதே எமது செயற்பாடுகளாக அமைத்திருந்திருக்கின்றன.
கடந்த காலங்களில் இந்த மாவட்டத்தில் எமது மக்கள் பல வாய்ப்பக்களை இழந்துள்ளதுடன் பல அசௌகரியங்களையும் சந்தித்து வந்தனர்.

ஆனால் நாம் அவ்வாறு எச்சந்தர்ப்பத்திலும் பாரபட்சம் காட்டியது கிடையாது. அதுமட்டுமல்லாது எமது மக்களின் எதிர்காலம் தொடர்பில் சிந்திது அவர்களது அபிலசைகளை பெற்றுக்கொடுப்பதிலேயே அயராது உழைத்து வருகின்றோம்.

இனியும் எமது மக்களுக்கு வலிகள் வேண்டாம். வியர்வை சிந்தி உழைத்து வாழும் மக்களாக எமது மக்களை நாம் உருவாக்குவோம்.

நாம் தேர்தல் கலங்களில் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் தட்டிக்களித்தது கிடையாது. மக்களை ஏமாற்றியதும் கிடையாது. அதேபோல ஜதார்த்தத்துக்கப்பற்பட்ட விடயங்களை கூறியதும் கிடையாது.
கடந்தகாலங்களில் நாம் மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் நாம் மேற்கொண்ட பொரும் பணிகளே இதற்கு சான்றாகும்.

எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்தி என்னுடன் அணிதிரண்டு வருவார்களானால் எமது மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு அதை சாதித்துக் காட்ட எம்மால் முடியும்.

அதற்கான நம்பிக்கையும் ஆழுமையும் எம்மிடம் உண்டு.அதற்கான சந்தர்ப்பம் மறுபடியும் எமது மக்களிடம் கிடைத்துள்ளது.
அந்தவகையில் நீங்கள் எம்மை நம்புங்கள். நான் உங்கள் அபிலாஷைகளுக்கு நிச்சயம் தீர்வுகண்டுதருவேன் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment