ஈழத்து சீரடி ஆலயத்தில் “மடத்தார்பதி வாழ் மன்னவனே” இறுவட்டு வெளியீடு!! (படங்கள்)

சீரடி சாயியைப் போற்றி அமைந்துள்ள பாடல்கள் அடங்கிய “மடத்தார்பதி வாழ் மன்னவனே” எனும் இசைப்பேழை கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஈழத்து சீரடி ஆலயம் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியில் அமைந்துள்ள சீரடி சாய் மந்தீரில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு விழாவில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் சி.சத்தியசீலன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இறுவெட்டை வெளீயிடு செய்து வைத்தார்.

நிகழ்வில் சின்மயாமிஷன் வதிவிட ஆச்சாரி சிதாகானந்தா, யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் ,வலம்புரிபத்திரிகை ஆசிரியர் விஐயசுந்தரம் உட்பட பெருமளவான சீரடி சாய் பக்தர்களும் கலந்து கொண்டனர் .

ஈழத்துக் கவிஞர் வேலணையூர் பா. சசிகுமாரின் பாடல் வரிகளுக்கு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் அக்னி கணேஸ் இசையமைத்திருக்கும் இந்த இசை இறுவட்டில் ஐயப்பதாசன், பிரபாகர், ராகுல், தீபிகா, பவன், அபர்ணா, சந்திரஜோதி ஆகியோர் பாடல்களுக்குக் குரல் தந்திருக்கின்றனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Comments (0)
Add Comment