வவுனியாவில் ஜந்து கிராமங்களில் குடிநீர் திட்டம் ஆரம்பித்துவைப்பு!! (படங்கள்)

வவுனியாவில் தமிழ் சிங்கள சகோதரர்களின் நிதிப்பங்களிப்பில் ஜந்து விவசாயக் கிராமங்களில் குடிநீர்திட்டம் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டையடுத்து கிராம அமைப்புக்களின் கோரிக்கைக்கு அமைவாக தமிழ் சிங்கள சகோதரர்களின் நிதிப்பங்களிப்பில் குடிநீர் வழங்கும் திட்டம் சமூக ஆர்வலர் எஸ். ஜோர்ஜ் தலைமையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்தேவைத்திட்டத்தில் விவசாயக்கிராமங்களை உள்ளடக்கிய நாமல்கமகே விகாரைக்கு அருகில் அப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் கணேசபுரம் பொது காணி ஒன்றில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிக்காகவும் புதியசின்னக்குளம் கிராம அபிவிருத்திச்சங்கத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிக்காகவும் எல்லப்பர்மருதங்குளம் கிராம அபிவிருத்திச்சங்கத்திலும் சிதம்பரபுரம் கற்குளம் படிவம் ஒன்றில் சனசமூக நிலையத்தின் ஏற்பட்டில் கிராம அபிவிருத்திச்சங்கத்திலும் அப்பகுதி கிராமமக்களின் குடிநீர் தேவைகள் இத்திட்டத்தினூடாக பூர்த்தி செய்துகொடுக்கப்பட்டுள்ளது. மணிப்புரம் மக்களுடன் சந்திப்பு கிராம அபிவிருத்திச்சங்கத்தில் ஏற்படுத்தப்பட்டு தேவைகள் கேட்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் நாமல்கமே பகுதியில் வசித்து வரும் விவசாயக்குடும்பங்களுக்கு சோளம் விதை செய்கை மேற்கொள்ள விதைகளும் வழங்கிவைக்கப்பட்டதுடன் சின்னப்புதுக்குளம் முன்பள்ளிக்கு மின்விசிறி மற்றும் ஒரு தொகுதி கொப்பிகள், அலுவலகத்தேவைக்கு அலுமாரி கொள்வனவுக்கான பணம் என்பனவும் இதன்போது கலந்துகொண்ட பிரதிநிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

அப்பகுதி கிராம அலுவலகர்கள், கிராம அமைப்புக்கள், பொதுமக்கள் எனப்பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment