யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்ட நாமல்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச மற்றும் அங்கஜன் இராமநாதன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டனர்.

இன்று காலை குறித்த விஜயத்தினை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குருநகர் இறங்குதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது இத்திய மீனவர்கள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டுள்ளனர்.

அத்தோடு தமது வீதிகள் பயன்படுத் முடியாத நிலையில் இருப்பதாகவும், பாடசாலை மாணவர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் குறித்த வீதிகளினால் பாடசாலைக்கு செல்வதாகவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment