வவுனியா முச்சக்கரவண்டி சாரதி கொலை! சந்தேக நபர் கைது!!!!

கடந்த வாரம் வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சாரதியை தங்க நகைக்காக கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கள்ளிக்குளத்தில் முச்சக்கர வண்டி சாரதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததோடு அவரின் உடல் பாதி தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிசார் முச்சக்கரவண்டி சாரதியை கொலை செய்ததாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் பிரிவின் விசேட பொலிஸ் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் சந்தேகநபரை, விசாரணைகளின் பின்னர் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 9-10-2019 ஆம் திகதி ஒரு பிள்ளையின் தந்தையான சின்னப்புதுக்குளத்தினை சேர்ந்த 27 வயதுடைய கேதீஸ்வரன் சுவேந்திரபிரகாஸ், பற்றையொன்றினுள் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தார்
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணையினை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment