வழிப்பறி கொள்ளை சந்தேகநபரை பொலிஸ் தடுப்பில் ஒரு வாரம் வைத்து விசாரிக்க நீதிமன்று அனுமதி!!

யாழ்ப்பாணம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 22ஆம் திகதிவரை பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை நடந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் அனுமதியளித்தார்.

“சந்தேகநபரின் உடமையிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது. அத்துடன், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார். கொள்ளையிடப்பட்ட நகைகள் தொடர்பில் சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து அவை மீட்கப்படவேண்டும்.

அதனால் அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க 14 நாள்களுக்கு மன்று அனுமதியளிக்கவேண்டும்” என்று பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேகநபரை ஒரு வாரத்துக்கு (வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை) பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜமேசன் அஜந்தன் (வயது 21) என்ற இளைஞனே நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் பல முறைப்பாடுகளின் கீழ் இளைஞனை பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரில் குடும்பப் பெண்ணொருவரின் கைப்பையைப் பறித்துச் சென்று அதிலிருந்த 24 தங்கப் பவுண் நகையை கொள்ளை அடித்தமைக்கு சந்தேகநபர் தேடப்பட்டு வந்தார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment