அரியானா சட்டசபை தேர்தலில் சோனியா காந்தி நாளை பிரச்சாரம்..!!

அரியானா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அவர் அரியானாவின் மஹேந்திரகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். அவருடன், மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment