மருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்!

மகளின் கணவரின் அதாவது மாப்பிள்ளையின் அண்ணனை மாமியார் கல்யாணம் செய்து கொண்டார். இப்போது இந்த புதுமண ஜோடி போலீஸ் பாதுகாப்பு கேட்டு கோர்ட் வாசலை மிதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரை சேர்ந்தவர் அம்சா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு வயது 37 ஆகிறது. 18 வயதில் இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அந்த மகள், 21 வயது இளைஞரை காதலித்தார்.

லவ் மேட்டர் வீட்டுக்கு தெரிந்ததும் அம்சாவும், அவரது கணவரும் பச்சைக்கொடி காட்டிவிட்டார். பின்னர் இரு குடும்பத்தினரும் உட்கார்ந்து பேசி, காதலர்களுக்கு கல்யாணம் பண்ண முடிவு செய்தனர். சில மாசத்துக்கு முன்புதான் கல்யாணம் தடபுடலாக நடந்தது.

மகளின் கணவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். மாப்பிள்ளைக்கே 21 வயசுதான். இந்த அண்ணனுக்கு 22 வயசாகிறது. இவருக்கு இன்னும் கல்யாணமும் ஆகவில்லை. பதான்கோட்டில் வேலை செய்து வருகிறார்.

இவர் ஆபீசுக்கு பக்கத்திலேயேதான் அம்சாவின் வீடும் உள்ளது. அதனால் ஆபீஸ் முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் அம்சாவையும் பார்க்க அடிக்கடி அங்கு போவாராம். காதலுக்கு வயசு தெரியுமா.. உறவு தெரியுமா.. பத்திக் கொண்டது!

22 வயது மாப்பிள்ளையின் அண்ணனுக்கும் 37 வயது அம்சாவுக்கும் காதல் உச்சக்கட்டத்துக்கு போய்விட்டது. இதை வெளியே சொன்னால் காரித்துப்புவார்கள் என்று அம்சாவுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் லவ் ஆச்சே.. அதனால், வீட்டில் கூடவே அப்பாவி வாழ்ந்து வந்த கணவரை, அவருக்கே தெரியாமல் டைவர்ஸ் செய்துவிட்டார் அம்சா. டைவர்ஸ் அப்ளை செய்து கோர்ட் வரை சென்று வந்தவரைக்கும் இவருக்கு எதுவுமே தெரியாது.. அம்சாவுடன் அதே வீட்டில்தான் இருந்திருக்கிறார்.

டைவர்ஸ் கிடைத்ததும் அம்சா, மாப்பிள்ளையின் அண்ணனை இழுத்து கொண்டு, கடந்த 2 ஆம் தேதி மாலிக்பூரில் வைத்து கல்யாணமும் செய்து கொண்டார். இப்படி ஒரு டைவர்ஸ்.. புது கல்யாணம் இது எதுவுமே மகள் உட்பட யாருக்குமே தெரியாது.

திடீரென புதுப்பொண்ணு மாதிரி அம்மா இருக்கவும், பக்கத்தில் கணவனின் அண்ணன் இருக்கவும்தான் மகள் அதிர்ச்சியானார். ஆத்திரம் அடைந்தார்.. தலையில் அடித்து கொண்டு கதறினார்.. ஆனால், இந்த புது மண தம்பதி கேட்கவே இல்லை… “நாங்க சேர்ந்துதான் வாழ போறோம்.. எங்க காதல் தெய்வீகமானது.. எங்களை யாராலும் பிரிக்க முடியாது..” என்று கறாராக சொல்லிவிட்டார் அம்சா.

ஆத்திரத்திலும், கடுப்பிலும் குடும்பத்தினர் ஏதாவது செய்து பிரித்து விடபோகிறார்கள் என்று பயந்த அம்சா தம்பதி, பாதுகாப்பு கேட்டு கோர்ட் வரை வந்துள்ளனர். இந்த வழக்கு வரும் 31 ஆம் தேதி விசாரிக்கப்பட இருக்கிறது. 15 வருஷ வித்தியாசம் உள்ள இந்த ஆதர்ச தம்பதியின் வழக்கின் தீர்ப்பு என்ன வரப்போகிறதோ.. பொறுத்திருந்து பார்க்கலாம்!

Comments (0)
Add Comment