சைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி – ராஜ்நாத் சிங் ஒப்புதல்..!!!

ராணுவத்தினரின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் வகையில் செயல்பட்டு வருவது சைனிக் பள்ளிகள். இந்தியா முழுவதும் சைனிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தற்போது சைனிக் பள்ளிகளில் ஆண் குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி அளிக்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

சைனிக் பள்ளிகளில் ஆண் குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுக்கு முன் மிசோரமில் உள்ள சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது.

அங்கு கிடைத்த பலனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல முடிவானது. எனவே, சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளை சேர்க்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, வரும் 2021-2022-ம் கல்வி ஆண்டில் சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments (0)
Add Comment