இனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் – பாஜக மீது சித்தராமையா பாய்ச்சல்..!!!

மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் பாஜகவினர், வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

பாஜகவின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மங்களூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, பாஜகவினர் இனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மாநிலம் மங்களூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கட்சியின் மூத்த தலைவர் சித்த ராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வினர் காந்திஜி கொலை வழக்கில் தொடர்புடைய வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இவர்கள் இனி காந்திஜியை கொன்ற கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுத்தாலும் கொடுப்பார்கள். இந்த நாட்டில் என்ன நடக்கிறதென்றே எனக்கு தெரியவில்லை என குறிப்பிட்டார்.

Comments (0)
Add Comment