கேரள பெண் ஜோளி பாணியில் 3 பேரை கொன்று புதைத்த பெண்..!!!

கேரள மாநிலம் கூடத்தாயி பகுதியில் சொத்துக்காக தனது குடும்பத்தினர் 6 பேரை தன்னந்தனி ஆளாக கொன்று புதைத்த ஜோளி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சாப்பாட்டில் வி‌ஷம் கலந்து கொடுத்து 6 பேரையும் கொன்றதாக ஜோளி வாக்குமூலம் அளித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே பாணியில் தமிழகத்திலும் சொத்துக்காக தனது குடும்பத்தினர் 3 பேரை ஒரு பெண் கொன்று புதைத்த கொடூரம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாச நாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ். பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி வசந்தாமணி. மதுரை ஆரப்பாளையத்தில் வசித்து வந்தனர்.

சம்பவத்தன்று செல்வராஜ் மகன் பாஸ்கரனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வசிக்கும் தனது அக்காள் கண்ணம்மாள் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார்.

அப்போது சொத்து தகராறு காரணமாக செல்வராஜையும், வசந்தாமணியையும் கண்ணம்மாள், உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தார். பின்னர் உடல்களை மருமகன் நாகேந்திரன் மற்றும் சிலரது உதவியுடன் வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்தார்.

இதையொட்டி கண்ணம்மாள், அவரது மருமகன் நாகேந்திரன், அவரது நண்பர் இளங்கோ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நாகேந்திரனின் தங்கையான பெங்களூரை சேர்ந்த நாகேஸ்வரி வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். அதில் 5 மாதங்களாக எனது தாய் ராஜாமணியை (60) காணவில்லை. கடந்த மே மாதம் வெள்ளகோவிலில் நாகேந்திரன் மாமியார் வீட்டில் நடைபெற்ற விஷேசத்திற்கு எனது தாயார் வந்தார். அதன் பின்னர் அவரை காணவில்லை என கூறி இருந்தார்.

போலீஸ் விசாரணையில் ராஜாமணியையும் , கண்ணம்மாள் கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிறையில் இருக்கும் கண்ணம்மாளிடம் விசாரித்த போது அவர் ராஜாமணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு அவரது மகள் பூங்கொடி உடந்தையாக இருந்துள்ளார். அவரையும் கைது செய்தனர். பூங்கொடி போலீசாரிடம் கூறியதாவது-

எனது மாமியார் ராஜாமணிக்கும், எனக்கும் ஒத்து வராது. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனது கணவர் நாகேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவரை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள அவரது அக்காள் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.

அந்த சமயத்தில் எனது மாமியாரை கோவில் திருவிழாவிற்கு அழைத்தோம். அவரும் வந்து இருந்தார். அப்போது எனக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் அரிவாளால் எனது மாமியார் காலை வெட்டினேன்.

தாய் கண்ணம்மாள் எனது மாமியாரின் வாய், மூக்கை பொத்தினார். அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். பிணத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்து விட்டோம்.

கண்ணம்மாள் தம்பி செல்வராஜ், அவரது மனைவி வசந்தாமணி ஆகியோரது உடலை வீட்டின் பின்புறம் தான் புதைத்திருந்திருந்தார்.

அந்த இடத்தின் அருகிலேயே ராஜாமணி உடலையும் புதைத்துள்ளார். ராஜாமணி உடலை தோண்டி எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment