60 பெண்களின் முன்னிலையில் மோசமான செயலை செய்த 29 வயது இளைஞன்… கொடுக்கப்பட்ட தண்டனை..!!!

கனடாவில் 60 பெண்கள் முன்னிலையில் மிக மோசமான செயலை செய்த இளைஞருக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vancouver-ஐ சேர்ந்த டிரிவோர் ஜான் குர்ஜட்டா (29) என்ற இளைஞர் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் பல்வேறு இடங்களில் சாலையில் நடந்து செல்லும் பெண்கள் அருகில் லொறியுடன் சென்றுள்ளார்.

பின்னர் பெண்களுடன் பேச்சு கொடுத்து அவர்களை தன் பக்கம் திசை திருப்பிய ஜான் அவர்கள் முன்னிலையில் சுய இன்பம் அடைந்துள்ளார்.இது போல சிறுமிகள், பெண்கள் என 60 பேர் முன்னிலையில் ஜான் இவ்வாறு செய்துள்ளார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொலிசார் ஜானை கைது செய்தனர்.அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜான் நன்னடத்தையை மூன்று ஆண்டுகளுக்கு கண்காணிக்கவும், கவுன்சிலிங் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதோடு 120 மணி நேரம் ஜான் சமூகசேவை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

Comments (0)
Add Comment