ஜேர்மனியில் ஒரே கட்டிடத்தில் வேலை செய்த இருவர் அடுத்தடுத்து மர்ம மரணம்..!!!

கிழக்கு ஜேர்மனியில் ஒரே கட்டிடத்தில் வேலை செய்த இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதையடுத்து அங்கு அவசர உதவிக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

aldensleben என்ற இடத்திலுள்ள பார்சல் டெப்போ ஒன்றில் பணியாற்றிவந்த இருவர் மர்மமாக உயிரிழந்துள்ளனர்.

செவ்வாயன்று அதிகாலையில் அந்த கட்டிடத்தில் பணி செய்துவந்த 58 வயது நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பின்னர் அன்று மாலையே, அதே நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் ஒன்றின் இருக்கையில் அமர்ந்தவாறே 45 வயதுடைய அதன் சாரதி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது

எனவே உடனடியாக அந்த இடத்தில் வேலை நிறுத்தப்பட்டதோடு, அந்த கட்டிடமும் மூடப்பட்டது.அவசர உதவிக்குழுவினர், அங்கு ஏதேனும் நச்சுப்பொருட்கள் இருக்குமா என தேடினர்.

பின்னர் மற்றொரு நபர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட, தீயணைப்பு வீரர்கள் 120 பேர் பாதுகாப்பு கவச உடை அணிந்து நச்சுப்பொருட்களை தீவிரமாக தேடினர்.

அப்போது இரண்டாவது நபர் இறந்து கிடந்த இடத்தில் நச்சுப்பொருட்கள் கிடைத்தன என்றாலும், அதிக அளவில் கிடைக்கவில்லை.

நச்சுப்பொருட்கள் குறித்த அச்சம் நிலவுவதையடுத்து, இறந்தவர்களின் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

நச்சுப்பொருட்கள் கிடைத்த இடத்தை ஆய்வு செய்து முடித்த பின்னரே உடற்கூறு ஆய்வுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Comments (0)
Add Comment