ஆப்கானிஸ்தானில் இருந்து இதய நோய் சிகிச்சைக்காக சீனா வந்த 61 குழந்தைகள்..!!!

ஆப்கானிஸ்தானில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் சீனாவின் செஞ்சிலுவை அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பி&ஆர் சகோதரத்துவ நிதி மூலம் உதவி பெறுகிறது.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக ஆகஸ்ட் 2017 முதல் அக்டோபர் 2018 ஆண்டுகளில் 100 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இரண்டாம் கட்டமாக 150 குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 31ம் தேதி 24 குழந்தைகள் சீனா வந்தனர், ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள பீபுள்ஸ் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற்ற பின்னர் கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி ஆப்கானிஸ்தான் திரும்பினர்.

இந்நிலையில், இத்திட்டத்தின் இரண்டாம்கட்டத்தின் அடுத்த பகுதியாக, இதய நோயால் பாதிக்கப்பட்ட 61 குழந்தைகள் நேற்று ஜின்ஜியாங் வந்தனர். ஜின்ஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெறவுள்ளனர்.

Comments (0)
Add Comment