ஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி..!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல்களை அரங்கேற்றிவருகின்றனர்.

பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் அந்நாட்டு அரசுப்படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையினர் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள அச்சின் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு பயங்கரவாதிகளின் மறைவிடங்கள், பதுங்கு குழிகள் மற்றும் கட்டுப்பாடு மையங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment