கனடாவில் கண் மருத்துவரிடம் சென்ற பல் மருத்துவர்: வாழ்வே மாறிப்போன சோகம்..!!

பல் மருத்துவராக பணியாற்றி வந்த ஒருவர், தனது கண் பிரச்னைக்காக கண் மருத்துவர் ஒருவரிடம் செல்ல, அவர் செய்த தவறால் வாழ்வே பாதிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற படியேறினார்.

கிராமங்களில் சோடா புட்டி கண்ணாடி என்று கூறும் தடித்த கண்ணாடி அணிந்திருந்தாலும், ஒரு பல் மருத்துவராக நன்றாகத்தான் பணியாற்றிக்கொண்டிருந்தார் Brent Jesperson.

அந்த கண்ணாடியை போட்டுக்கொண்டு விளையாடவும் செய்வார் அவர்.அப்படியிருக்கும் நிலையில், அவர் சந்தித்த Dr. Yair Karas என்னும் கண் மருத்துவர், புதிய கண் அறுவை சிகிச்சை ஒன்று குறித்து அவரிடம் கூறி, பெரிய அளவில் பக்க விளைவுகள் இருக்காது என்றும் கூறியிருக்கிறார்

Radial keratotomy (RK) என்று அழைக்கப்படும் அந்த அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டபோது, முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்திருக்கிறது.

ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல Jespersonஇன் கண் பார்வை மோசமாகி, ஒரு கட்டத்தில் பல் மருத்துவரான அவரால் வேலை செய்ய முடியாமல் போய், தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார் அவர்.

வேலையை இழந்து மன அழுத்தத்துக்கு ஆளாகிய அவர், கடைசியாக நீதிமன்றம் சென்றிருக்கிறார்.இந்த வாரம் ரொரன்றோ நீதிபதி ஒருவர் கண் மருத்துவரான Dr. Yair Karas, பல் மருத்துவராக இருந்த Jespersonக்கு 5.6 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Jespersonஇன் கண் பிரச்னைகளால் அவரது வாழ்வே மாறிப்போனது என்று கூறியுள்ள நீதிபதி, அவரால் இனி பல் மருத்துவராக வேலை செய்யமுடியாது, அவரது கண் பிரச்னையால் அவருக்கு தலை வலி ஏற்படுகிறது, அதனால் அவருக்கு சோர்வு ஏற்படுவதால் அவரால் எதுவுமே செய்யமுடியவில்லை என்று கூறியுள்ளார்

Comments (0)
Add Comment