கணவனுடன் இறக்க விரும்பிய பெண்: உதவிய மருத்துவருக்கு சிறை..!!

சுவிட்சர்லாந்தில் தனது கணவனுடன் இறக்க விரும்பிய ஒரு பெண்ணை கருணைக்கொலை செய்த மருத்துவருக்கு 120 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Dr. Pierre Beck, அந்த பெண் ஆழ்ந்த துயரத்தில் இருந்ததாகவும், அவருக்கு உதவியதற்காக தான் வருத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மிகவும் உடல் நலமின்றி இருந்த கணவுடன் தானும் இறக்க விரும்புவதாக தெரிவித்த ஒரு 86 வயது பெண், உடல் நலத்துடன் இருந்தபோதிலும், அவரை கருணைக்கொலை செய்ததாக Beck மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுவிஸ் சட்டத்தில் கருணைக்கொலைக்கு அனுமதியில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், Beckக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளனர்.

நானாக எடுத்த இந்த முடிவுக்காக என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதேபோல் இன்னொரு முறை யாராவது உதவி கோரினாலும், இதையேதான் நான் செய்வேன், ஆனால் ஆலோசனை கேட்பேன் என்றார் அவர்

Comments (0)
Add Comment