ரோட் தீவில் கோலாகலம் – ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலரை மணந்தார்..!!!

ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் (வயது 29). இவர் காதல், நகைச்சுவை கலந்த ‘சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்’ திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது உள்பட பல விருதுகளை அள்ளியவர்.

குக் மரோனி என்ற கலைப்பொருள் வியாபாரியை அவர் காதலித்து வந்தார். இருவரும் பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக்கொண்டனர். இது தொடர்பாக ஹாலிவுட் பட உலகில் கிசுகிசுக்கள் வலம் வந்தன.

ஒரு கட்டத்தில் ஜெனிபர், தன் காதலர் குக் மரோனியை நியூயார்க் நகரில் திருமணம் செய்து கொண்டதாகவெல்லாம் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், ஜெனிபர் லாரன்ஸ், குக் மரோனி மணவிழா அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள நியூபோர்ட் நகரில் 19-ந் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்தன. அது உண்மைதான்.

திருமணத்துக்காக ஜெனிபரும், குக் மரோனியும் நேற்று முன்தினம் தனியார் விமானம் மூலம் நியூபோர்ட் நகருக்கு வந்தனர். அங்கு அவர்களின் மண விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

இந்த திருமண விழாவில் ஜெனிபர் மற்றும் குக் மரோனி ஆகியோரின் குடும்பத்தினர், நண்பர்கள் என 150 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

Comments (0)
Add Comment