மாஸ்கோவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் பலியானார்கள் – அக்.20.1982..!!!

ரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்நது போட்டியின் போது ஒரு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 66 ரசிகர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1803 – ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்த்துக்கு ஒப்புதல் அளித்தது. * 1827 – ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானீய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. * 1941 – கிறகுஜேவாச் படுகொலைகள்: செர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாசி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர். * 1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை ஜெர்மனியிடமிருந்து மீட்டது.

* 1944 – கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பெர் கொல்லப்பட்டனர். * 1955 – த லோட் ஒவ் த ரிங்ஸ் நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஒஃப் த கிங் வெளியிடப்பட்டது. * 1946 – புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. * 1973 – சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது. * 1976 – மிசிசிப்பி ஆற்றில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 18 பேர் மட்டும் தப்பினர். * 1982 – இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. * 1982 – மாஸ்கோவில் இடம்பெற்ற சர்வதேச கால்பந்து போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.

Comments (0)
Add Comment