இளம்பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுநாள் கொன்ற வாலிபர் கைது..!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் லட்சுமிபுரா என்ற கிராமம் அமைந்துள்ளது.

அங்கு பவன்(19) என்ற வாலிபர் தனது பள்ளிப்பருவத்தில் இருந்தே தன்னுடன் சேர்ந்து படித்த நாகம்மா(18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், ஆசைவார்த்தை பேசி நாகம்மாவை மயக்கிய பவன் அவரை கர்ப்பமாக்கியுள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த இரு வீட்டாரும் பவனுக்கு நாகம்மாவை கடந்த புதன் கிழமை (அக்டோபர் 16) திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால், நாகம்மாவை திருமணம் செய்து கொண்டதில் பவனுக்கு விரும்பவில்லை. அவரது வயிற்றில் வளரும் கருவுக்கு நான் காரணமில்லை என மறுத்தார்.

இந்நிலையில், திருமணம் நடந்து முடிந்த மறுநாள் தனது மனைவி நாகம்மாவை பவன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment