பெண் குழந்தைகள் பெற்றதால் முத்தலாக் கொடுத்த கணவர் மீது மனைவி புகார்..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் கமில் என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே, கமிலின் மனைவி 5-வது பெண் குழந்தையை கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றெடுத்தார். 5வது குழந்தையும் பெண்ணாக பிறந்ததை அறிந்த கமில், தொலைபேசி மூலம மனைவிக்கு முத்தலாக் கூறினார். இதை ஏற்க மறுத்த அந்த பெண் அஸ்மோலி காவல் நிலையத்தில் கமில் மீது புகார் அளித்தார்.

இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி யமுனா பிரசாத் கூறுகையில், இந்திய கோர்ட் அமைப்பு மற்றும் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கமில் மீது முத்தலாக் கூறியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Comments (0)
Add Comment