குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி – 6 பேர் வைத்தியசாலையில்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் மத்தி 40 ஏக்கர் பகுதியில் குளவிகூடு கலைந்து குத்தியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்கள் உள்ளிட்ட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திரபுரம் மத்தி பகுதியில் வீட்டிற்கு அருகில் பாரிய குளவிகூடு ஒன்று காணப்பட்டுள்ளது. வீசிய கடும் காற்று காரணமாக குளவிகூடு கலைந்து அயலில் இருந்தவர்களுக்கு குத்தியுள்ளது. துரத்தி துரத்தி குத்தியதன் காரணமாக 67 அகவையுடைய கறுப்பையா சிவஞானம் என்ற வயோதிப குடும்பஸ்தரின் உடலில் அதிகளவான குழவிகள் கொட்டியுள்ளது.

இதேவேளை அவரின் குடும்பத்தினை சேர்ந்த மனைவி மற்றும் பெண் பிள்ளை மீதும் குத்தியுள்ளது. மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த குறித்த குடும்பஸ்தரின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மருத்துவ அறிக்கையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Comments (0)
Add Comment