வவுனியாவிலிருந்து போட்டி புறாக்கள் பறக்க விடப்பட்டன!! (படங்கள்)

வவுனியாவிலிருந்து போட்டி புறாக்கள் கொழும்பை நோக்கி இன்று (20) பறக்க விடப்பட்டன.
போட்டி போட்டு பறப்பதற்காக பழக்கப்பட்ட புறாக்கள் வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கி பறக்க விடப்பட்டன இந்நிகழ்வானது வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

கொழும்பு புறா வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் கோசல பெனாண்டோ தலைமையில் நடைபெற்ற புறா பறக்கவிடும் போட்டியில் 280 புறாக்கள் போட்டிக்காக பங்குபற்றியிருந்தது.
சீல் பண்ணப்பட்ட பெட்டிகளில் அடைத்து எடுத்து வரப்பட்ட புறாக்கள் ஏற்பாட்டாளர் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு பறக்க விடப்பட்டன.

இப் புறா பறக்கவிடும் போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்த கொழும்பு புறா வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் கோசல பெனாண்டோ, வவுனியாவிலிருந்து பறக்கவிடப்படும் இப் புறாக்கள் சுமார் மூன்று மணிநேரத்தில் கொழும்பை சென்றடையும். வெற்றிபெறும் மூன்று புறாக்களுக்கு முறையே 25 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபா உடன் சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

புறா போட்டி ஆரம்ப நிகழ்வில் வவுனியா நகரசபை மைதானத்தின் விழையாட்டு வீரர்களும் பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment