நம்பிக்கையை ஒருபோதும் களங்கப்படுத்த மாட்டேன்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் களங்கப்படுத்த மாட்டேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் பொதுஜன பெரமுன அரசாங்கத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் போது சுதந்திரக் கட்சிக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. நாட்டின் எதிர்காலத்தை கருதி சு.க எடுத்துள்ள வரலாற்று முடிவை வரவேற்கின்றேன் என்றார்.

உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ், அதன் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ உட்பட பல முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தையும் சுட்டிக்காட்டத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment