அராஜக சர்வாதிகார ஆட்சியா ஜனநாயக ஆட்சியா தேவை? – மக்களே தீர்மானிக்க வேண்டும்!!

அராஜக சர்வாதிகார ஆட்சிக்கு மீண்டும் செல்வதா, அல்லது ஜனநாயகப் பண்புகளுடனான ஆட்சியை ஏற்படுத்துவதா? என்பதை மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அழிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டை மீட்டு 2015 இல் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட பிரதமர் துப்பாக்கிக் கலாசாரத்தையும் அராஜகத்தையும் மீண்டும் நாட்டில் ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

மாத்தளை, லக்கலை தேர்தல் தொகுதியில் நேற்று (19) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

“தூய்மையான குடிநீர் கேட்டுப் போராடிய மக்களைத் துப்பாக்கிமுனையில் அடக்கிய அராஜக யுகம் மக்களுக்கு மறந்துபோயிருக்க வாய்ப்பில்லை” என்று சுட்டிக்காட்டிய பிரதமர், நாளைய சந்ததிக்குப் பாதுகாப்பானதும் ஜனநாயகமிக்கதுமான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஜனாதிபதியாக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment