ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு..!!!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய திட்டம் வகுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதற்காக எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் அதை முறியடித்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் தங்கார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.

இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment