ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி..!!!

ஆண்டிப்பட்டி அருகே வண்டியூரைச் சேர்ந்தவர் ராமன் (வயது 39). இவர் அப்பகுதியில் உள்ள கொழிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இவர் தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது மின் மோட்டார் சுவிட்ச்சை போட்டார். இதில் எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி ராமனின் மனைவி ஜெயந்தி ராஜதானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அல்லிநகரம் வி.எம்.சாவடி தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 44). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனக்கு சொந்தமான டிராக்டரை சுத்தப்படுத்துவதற்கு மின் மோட்டார் சுவிட்ச்சை போடச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராமநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி ராமநாதனின் தாய் குருவம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment