நெற்குன்றம் அருகே கணவர் மது குடித்ததால் மனைவி தற்கொலை..!!!

நெற்குன்றம் மூகாம்பிகை நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் வசந்தகிருஷ்ணன். இவரது மனைவி திவ்யா (26). தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். இவர்களது மகன் லஷ்மிகாந்த் (9). தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.

வசந்தகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற வைத்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த வசந்த கிருஷ்ணன் மீண்டும் மது குடித்தார். இதனால் கணவன் – மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வசந்த கிருஷ்ணன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். கணவர் மது குடித்ததால் மனவேதனை அடைந்த திவ்யா, மகனுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் விஷம் குடித்துவிட்டு மகன் லஷ்மிகாந்துக்கும் கொடுத்தார். இதில் இருவரும் வீட்டில் மயங்கி விழுந்தனர்.

சிறிது நேரத்தில் திவ்யாவின் அண்ணன் வீட்டிற்கு வந்தார். அப்போது திவ்யாவும், லஷ்மிகாந்தும் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக 2 பேரையும் மீட்டு வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாப மாக உயிரிழந்தார். லஷ்மிகாந்துக்கு ஆபத்தான நிலையில் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ் பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)
Add Comment