தபால் மூல வாக்காளர் அட்டைப் பொதிகள் கையளிப்பு!!

உத்தியோகபூர்வ தபால் மூல வாக்காளர் அட்டைகள் மிகவும் பாதுகாப்புடன் விநியோகிப்பதற்காக தபால் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தபால் மூல வாக்காளர் அட்டைகள் பாதுகாப்பான பொதிகளில் நாளை முதல் உறுதி செய்யும் அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று பிரதித் தபால் அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே பெருமளவில் விண்ணப்பித்துள்ளனர். இதன் எண்ணிக்கை 70 ஆயிரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment