அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்- வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!!!

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:-

அரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் பண்டிகையை சிறப்பிக்கவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment