ஞானசாரரை மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!!

முல்லைத்தீவு , பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக் குளத்துக்கு அருகில் தேரரின் உடலை தகனம் செய்த விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளையை அவமதித்தமை தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மூவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையிலேயே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த மனு முல்லைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா சார்பில் அவரது சட்டத்தரணியால் கடந்த 14ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

Comments (0)
Add Comment